மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ
மகாநதி சீரியல்
விஜய் டிவியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடர்களில் ஒன்றாக உள்ளது மகாநதி சீரியல்.
பாரதி கண்ணம்மா தொடரை தொடர்ந்து குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் தொடர் தான் மகாநதி. அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது கதையில் விஜய்-வெண்ணிலாவை அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கும் வரை நான் அம்மா வீட்டிலேயே இருக்கிறேன் என்று உறுதியாக உள்ளார் காவேரி.
போட்டோ
இந்த வார கதைக்களத்தில் விஜய், காவேரி வீட்டிற்கு வந்துவிடுவார் என சந்தோஷத்தில் இருக்க வெண்ணிலா அவருக்கு ஷாக் கொடுக்கிறார்.
மீடியா முன் தன்னை விஜய் ஏமாற்றிவிட்டார் என கூற அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியவில்லை.
இந்த நிலையில் மகாநதி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெண்ணிலா புடவை கட்டி கோவிலில் இருக்க அவரது மாமா, ராகினி மற்றும் அப்பா உள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் அவர்களின் புகைப்படத்திற்கு பின்னால் ஒரு ஐயரும் சில பெண்களும் நிற்கிறார்கள்.
இதைப்பார்க்கும் போது வெண்ணிலாவிற்கும், விஜய்க்கும் திருமணமா என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.