விஜய் டிவியின் மகாநதி சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன தெரியுமா?... வெளிவந்த விவரம்
மகாநதி சீரியல்
காதல் ஜோடிகள், இளம் கலைஞர்கள் ஏன் இல்லத்தரசிகளே மிகவும் ரசித்து பார்த்த ஒரு சீரியல் தான் மகாநதி.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கை கதையாக ஆரம்பத்தில் அமைந்தது. பின் காவேரி-விஜய் கதாபாத்திரம் மிகவும் ஹைலைட்டாக அதை வைத்தே அதிகம் கதையை நகர்த்தினார்கள்.

இப்போது விஜய்-காவேரியின் கதை என்றே ஒளிபரப்பாகி வருகிறது.
ராகவ் ஏற்படுத்திய விபத்தில் காவேரி பழைய விஷயங்கள் அனைத்தையும் மறக்க அவரின் நினைவுகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வர விஜய் போராடி வருகிறார்.

அடுத்த கதைக்களம்
குட்டி காவேரியை கடத்தி தவறு செய்த ராகவ் அவரே தண்டனையை பெற்றுவிட்டார். அந்த கடத்தல் சம்பவத்தால் குட்டி காவேரி பயந்து போக அவருக்காக விஜய் வீட்டிலேயே தங்கிவிட்டார் காவேரி.

அடுத்த நாள் காலையில் விஜய்யை காவேரியை அவரது வீட்டில் இறக்கிவிடும் கேப்பில் தனது வாழ்க்கையில் மனைவியுடன் நடந்த விஷயங்கள் என அனைத்தையும் கூறுகிறார். அதையெல்லாம் கேட்டு காவேரியும் ஏதோ யோசிக்கிறார்.

இப்படி கதை சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் மகாநதி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற தகவல் வந்துள்ளது.
அதாவது அடுத்து காவேரி-விஜய்யின் திருமண ஏற்பாடு நடக்கப்போகிறது என கூறப்படுகிறது. காவேரிக்கு பழைய விஷயங்கள் நியாபகங்கள் வருவதோடு தொடரும் முடிவுக்கு வரும் என்கின்றனர்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri