இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேட் ஆன போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் 6
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுப்பாளராக களமிறங்கி படு பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம தேதி வெற்றிரமாக தொடங்கப்பட்டு 7 வாரங்கள் ஓடிவிட்டன.
வீட்டில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, நிவாஷினி, ஷெரினா, ராபர்ட் மாஸ்டர் என தொடர்ந்து பிரபலங்கள் வெளியேறி வருகிறார்கள்.
ராபர்ட் மாஸ்டர் எல்லாம் நன்றாக விளையாட்டில் கவனம் செலுத்தினால் இறுதிகரை வரக்கூடிய ஒரு போட்டியாளர்கள், ஆனால் வீட்டில் செய்த சில சேட்டைகள் வெளியேறுவது போல் ஆகிவிட்டன.
அடுத்த வார நாமினேஷன்
இந்த நிலையில் அடுத்த வாரம் வெளியேற்ற நாமினேஷன் நடந்தது. அதில் இதுவரை எலிமினேஷன் லிஸ்டில் வராதவர்களும் வந்துள்ளனர். யார் யார் என்றால் ரச்சிதா, குயின்சி, மைனா, கதிரவன், ஜனனி, ஷிவின், தனலட்சுமி மற்றும் மணிகண்டன் ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.