அன்பு செய்த காரியத்தால் குடும்பத்தில் ஏற்படும் மாற்றம், உடைந்து போன கயல், .. இனி நடக்கப்போவது என்ன
கயல் சீரியல்
சன் டிவியில் டிஆர்பி தொடர்ந்து கெத்து காட்டும் தொடர்களில் ஒன்று தான் கயல் சீரியல்.
அப்பாவை இழந்த தனது குடும்பத்தை தனியே தவிக்கவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என இல்லாமல் மொத்த குடும்பத்தையும் காக்கும் ஒரு தூணாக இருந்து வந்தவர் கயல்.

எப்படியோ பல தடைகள், பிரச்சனைகளை தாண்டி தனது அண்ணன், தம்பியை ஒரு நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். ஆனால் இன்னும் அவரால் தனது கணவருக்கு ஒரு உதவியும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.
எழில் இன்னும் தொழில் தொடங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார், கயலுக்கும் வேலை இல்லை.

புரொமோ
இந்த நேரத்தில் கயல் சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், அன்பு தனது அம்மாவிடம் ரூ. 3000 கொடுத்துவிட்டு வீட்டு செலவை பார்த்துக் கொள் என்கிறார்.

உடனே அவர் உனக்கு எவ்வளவு சம்பளம், இவ்வளவு தான் கொடுக்கிறாய் என கேட்க அன்பு, இந்த வீட்டை நான் மட்டும் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது போல் கேட்கிறீர்கள், மூர்த்தி அண்ணனும் உள்ளாரே என கூறிவிட்டு செல்கிறார்.
இதனை கேட்டதும் கயல் கஷ்டப்பட்டாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவரது அம்மா அன்பு செய்த காரியத்தை நினைத்து கயலிடம் புலம்புகிறார்.