வெடித்து சிதறும் குடும்பம், எழில் எடுத்த அதிர்ச்சி முடிவு... கயல் சீரியல் பரபரப்பு புரொமோ
கயல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் தொடர்களில் ஒன்று கயல்.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.
அப்பாவை இழந்த தனது குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்று குடும்பத்திற்காக பாடுபடுபவர் தான் கயல், தனது குடும்பத்திற்காக ஒரு தூணாக உள்ளார். இடையில் எழில் என்பவரை காதலிக்க அவரை திருமணமும் செய்தார்.

புரொமோ
இப்போது கதையில் தேவி குழந்தை பிரச்சனை, பண பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த வார எபிசோட் புரொமோவில், எழில் மூர்த்தியை பற்றி பண விஷயத்தில் சந்தேகப்படுகிறார். அதைக்கேட்டுவிட்ட அவரது மனைவி பெரிய பிரச்சனையை கிளப்புகிறார். அவர் அதிகமாக பேச எழிலும் கோபத்தில் பேச பிரச்சனை பெரிதாகிறது.
கடைசியில் எழில் நாம் தனியாக சென்றுவிடலாம் என கூற கயல் ஷாக் ஆகிறார். கயல், எழிலா, குடும்பமா என முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார்.