வெறியுடன் அன்பு.. மறுபடியும் கிளம்பிய ஆனந்தி! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் மொத்த ஊருக்கும் தெரிந்ததால் குடும்பமே அவமானப்பட்டு நிற்கிறது. அவரது அக்காவுக்கு நடந்த திருமணத்திலும் இதனால் சிக்கல் வந்துவிட்டது.
தான் தவறு செய்யவில்லை என நிரூபிப்பதாக கூறிவிட்டு ஆனந்தி தனது தோழிகள் உடன் சென்னைக்கு கிளம்பி வருகிறார்.

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! - 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை
அடுத்த வார ப்ரோமோ
ஆனந்தியை இப்படி சீரழித்தவனை விட மாட்டேன் என அன்பு ஒருபக்கம் கடும் வெறியுடன் இருக்கிறார். அவரிடம் மகேஷ் சிக்கினால் என்ன ஆகும்?
மறுபுறம் ஆனந்தி சிங்கமாக மாற வேண்டும் என வசனம் பேசி ஊக்கப்படுத்துகிறார் ஹாஸ்டெல் வார்டன். அதை கேட்டு ஆனந்தி மீண்டும் தனது கம்பெனிக்கு வேலை பார்க்க செல்கிறார். அவரை பார்த்து மற்றவர்கள் ஆச்சர்யம் ஆகிறார்கள்.
அடுத்த வார ப்ரோமோ இதோ பாருங்க.