அடுத்த வருடம் ஐந்து தமிழ் திரைப்படங்கள் ரூ. 600 கோடி வசூல் செய்யும்.. பிரபல தயாரிப்பாளர் பேட்டி
தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளிவந்த லியோ மற்றும் ஜெயிலர் ஆகிய இரு திரைப்படங்களுக்கும் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்துள்ளது.
லியோ ரூ. 598 கோடி வரை வசூல் செய்த நிலையில், ஜெயிலர் ரூ. 635 கோடி வரை வசூல் செய்து புதிய வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.
இதனால் இனி தமிழில் வெளிவரும் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களின் வசூல் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
வசூல் சாதனை படைக்கபோகும் படங்கள்
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் குறித்து பேசியுள்ளார்.
இதில் "அடுத்த ஆண்டு ஐந்து ரூ. 600 கோடி திரைப்படங்கள் வரவுள்ளது. ரஜினியின் வேட்டையன், விஜய்யின் தளபதி 68, அஜித்தின் விடாமுயற்சி, கமலின் இந்தியன் 2 மற்றும் சூர்யாவின் கங்குவா ஆகிய படங்கள் ரூ. 600 கோடி வசூலை தொடும்" என பேசியுள்ளார். இவருடைய இந்த கணிப்பு உண்மையாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
