இளம் நடிகரை காதலிக்கிறாரா நடிகை நிதி அகர்வால்.. வெளிவந்த உண்மை
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால்.
இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது தெலுங்கில் வெளியாவுள்ள 'ஹீரோ' என்ற படங்கள் பாபுவின் உறவினர் அசோக் கல்லாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபகாலமாக நிதி அகர்வாலும், அசோக் கல்லாவும் காதலித்து வருவதாக தெலுங்கு திரைவட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நிதி அகர்வால் " என்னை பற்றி என் குடும்பத்திற்கு தெரியும். எது உண்மை எது தவறு என்றும் அவர்களுக்கு தெரியும். இதுபோன்ற வதந்திகள் பள்ளி பருவத்தை போன்று இருக்கிறது " என தெரிவித்துள்ளார்.