விவாகரத்தான ஒரே வருடத்தில் இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகை நிஹாரிக- எப்போது மறுமணம்?

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை நிஹாரிகா
பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் மட்டுமே சினிமாவை ஆழ்கிறார்கள், அவர்களுக்கு தான் வாய்ப்புகள் ஈஸியாக கிடைக்கிறது என Nepotism குறித்து நிறைய பேச்சுகள் இருக்கிறது.
கோலிவுட்டிலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக Nepotism குறித்த பேச்சுகள் வர ஆரம்பித்துள்ளன.
ஆனால் டோலிவுட்டை எடுத்து பார்த்தால் அதிகம் பிரபலங்களின் வார்சுகள் தான் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளார்கள், ஆனால் அங்கு அதைப்பற்றிய பேச்சுகள் அதிகமாகவே வரவில்லை.
நிஹாரிகா
அப்படி பிரபலத்தின் மகள், மெகா குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற அடையாத்தோடு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழிலும் சில படங்கள் நடித்தவர் நிஹாரிகா.
இவர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி ஜெய்ப்பூரில் சைதன்யா ஜொன்னலகட்டாவுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. ஆனால் 2 வருடத்தில் சில கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் விவாகரத்து பெற்று அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர். வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொள்கிறோம்.
ஆனால் நாம் நினைப்பது எதுவும் அதேபோல் நடந்து விடுவதில்லை. அப்படிதான் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
இப்போது எனக்கு 30 வயது தான் ஆகிறது, அதனால் கண்டிப்பாக ஒரு நல்லவர் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்க தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.