நிக்கி கல்ராணிக்கு விரைவில் திருமணம்? பிரபல தமிழ் நடிகரை மணக்கிறார்
நடிகை நிக்கி கல்ராணிக்கு விரைவில் தமிழ் நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நிக்கி கல்ராணி
டார்லிங் படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை நிக்கி கல்ராணி. அவர் அதற்குப்பிறகு அவர் எக்கச்சக்க சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து இருக்கிறார். அவரது பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்று இருக்கின்றன.
மிர்ச்சி சிவா உடன் நிக்கி கல்ராணி நடித்து இருக்கும் இடியட் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.
ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்?
மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் தற்போது காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதை அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆதி வீட்டில் நடந்த விழாவில் நிக்கி பங்கேற்ற புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் இப்படி ஒரு செய்தி பரவியது.
இந்நிலையில் தற்போது நிக்கி கல்ராணி மற்றும் ஆதிக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. இந்த வருடம் திருமணம் நடைபெறும் என தெரிகிறது. இருப்பினும் அவர்கள் இருவருமே தற்போது வரை இதை உறுதியாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


திருமணம் செய்து 4 வருடத்தில் மனைவியை விவாகரத்து செய்த சாஹல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! IBC Tamilnadu
