நான் கர்ப்பமா.. இது எனக்கே தெரியாதே: நிக்கி கல்ராணி
ஆதி - நிக்கி கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணி மற்றும் ஆதி திருமணம் கடந்த மே மாதம் நடைபெற்றது. அவர்கள் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்து இருக்கும் நிலையில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
நிக்கி கல்ராணி தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்றும், அவர்கள் விரைவில் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றும் சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது.
கர்ப்பமா.. எனக்கே தெரியாதே
இந்நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை என நிக்கி கல்ராணி விளக்கம் கொடுத்து இருக்கிறார். "இந்த பெரிய நியூஸ் எனக்கே தெரியாது. என் சார்பாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டவர்கள், due date என்ன என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்."
"நான் இப்போது கர்பமாக இல்லை. வருங்காலத்தில் நானே அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். வதந்திகளை நம்பாதீர்கள்" என நிக்கி தெரிவித்து இருக்கிறார்.
— Nikki Galrani Pinisetty (@nikkigalrani) November 18, 2022
கோடிகளை அள்ளும் லவ் டுடே.. ஹீரோவாக கலக்கும் பிரதீப் ரங்கநாதன்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
