படக்குழுவினரால் ஏமாற்றப்பட்ட நடிகை நிக்கி கல்ராணி, கோபத்தில் அவர் செய்த வேலை- வெளிவந்த வீடியோ
ஜி.வி. பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.
இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ராஜவம்சம். சசிகுமாருடன் ஜோடி சேர்ந்து நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.
ராஜவம்சம் படப்பிடிப்பில் குழந்தைகளுடன் பலூன்களை அவர் ஊசி வைத்து குத்தி வெடிக்க அவர் எதிர்ப்பார்க்காமல் ஒரு பலூனை உடைக்க அதில் இருந்த தண்ணீர் அவர் மீது ஊற்றி விடுகிறது.
இதனால் கோபமாக நிக்கி அந்த இடத்தை விட்டு வெளியேறுவது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டு ராஜவம்சம் இன்று முதல் திரையரங்குகளில் என பதிவிட்டுள்ளார்.
அவரின் அந்த பிராங்க் வீடியோவை ரசிகர்கள் லைக்ஸ் குவித்து ரசித்து வருகிறார்கள்.