நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் திருட்டு.. போலீசில் புகார்
ஜி.வி. பிரகாஷ் நாயகனாக அறிமுகமான டார்லிங் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து, அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.
அதன்பின், தொடர்ந்து படங்களில் கமிட்டான நிக்கி கல்ராணி, தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ராஜவம்சம் படத்திலும் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நிக்கி கல்ராணி வீட்டில், தனுஷ் என்ற 19 வயது இளைஞர் கடந்த சில மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்த கேமரா மற்றும் அவரது ஆடைகளை, அவர் திருடி சென்றுள்ளார். இதையடுத்து அவர் மீது காவல்நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர், நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்து அவர் திருடிய பொருட்களை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri