நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்? வாழ்த்து மழையில் ஜோடி
நிக்கி கல்ராணி - ஆதி
திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திரங்களில் பிரபலமானவர்கள் நிக்கி கல்ராணி - ஆதி ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.
அப்போது இருவரும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு பாரிஸுக்கு ஹனிமூன் சென்றிந்தார்கள்.
நிக்கி கல்ராணி கர்ப்பம்
அங்கிருந்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், தற்போது நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் பெற்றோர்கள் ஆகவிருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இதுகுறித்து நிக்கி கல்ராணி - ஆதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.