நான் மாடலிங், சினிமா-னு வர காரணம் இதுதான்..! அம்மா சொன்னதை கேட்காத நடிகை நிக்கி கல்ராணி

nikki galrani
By Kathick Nov 18, 2021 03:00 PM GMT
Report

ஜி.வி. பிரகாஷ் நாயகனாக அறிமுகமான டார்லிங் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து, அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

அதன்பின், தொடர்ந்து படங்களில் கமிட்டான நிக்கி கல்ராணி, தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இயக்குனர் சசிகுமார் ஹீரோவாக நடித்திருக்கும் ராஜவம்சம் படத்தில் கதாநாகியாக நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இது தவிர்த்து மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்," சின்ன வயசுல இருந்து டாக்டர் ஆகணும்னு என் அம்மா சொல்லி சொல்லி எனக்கும் டாக்டர் ஆகணும்ன்ற ஆச வந்திருச்சு ஆனா, பெரிய பெரிய புத்தகங்களை பார்த்து இது நமக்கு செட் ஆகாதுனு மோடெல்லிங் சினிமான்னு வந்துட்டேன்' என தன் சிறுவயது கனவை பற்றி பேசியிருக்கிறார் நிக்கி.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US