திருமணம் முடிந்த சில வாரங்களில் நிக்கி கல்ராணி எடுத்த புதிய முடிவு?
நடிகை நிக்கி கல்ராணி தமிழில் பல ஹிட் படங்களில் நடித்து இருப்பவர். அவர் சமீபத்தில் நடிகர் ஆதியை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் மரகதநாணயம் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அவர்கள் ஆரம்பத்தில் நட்பாக பழகி அதன் பின் காதலிக்க தொடங்கி தற்போது திருமணம் செய்திருக்கிறார்கள்.
திருமண வரவேற்ப்பில் சினிமா துறையினர் பலரும் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நிக்கி தொடர்ந்து நடிப்பாரா என்று தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இந்நிலையில் தற்போது நிக்கி கல்ராணி கலர்ஸ் தமிழ் சேனலில் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடுவராக வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த ஷோ அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே நிக்கி மீண்டும் கெரியரில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
