பல்லவனை அடித்த நிலா.. வீட்டை விட்டு வெளியேறும் பல்லவன்.. பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன் யார் என்கிற உண்மை வெளிவந்துவிட்டது. பல்லவன் தன்னுடைய மகள் இல்லை என்பதை நடேசன் நிலாவிடம் கூறிவிட்டார்.

இது நிலாவிற்கு மட்டும் தெரியவரவில்லை, சேரனுக்கும் தெரிந்துவிட்டது. ஆனால், இந்த உண்மை பல்லவனுக்கு தெரிய கூடாது என முடிவெடுத்துள்ளனர்.
பல்லவனை அடித்த நிலா
இந்த நிலையில், யாரிடமும் சொல்லாமல் தனது அம்மா வீட்டிலிருந்து சென்றதற்கு காரணம் நடேசன்தான் என நினைத்துக்கொண்டு, அவர் சட்டை பிடித்து சண்டை போடுகிறார் பல்லவன்.

மேலும், 'நீ செத்துப்போயா' என தந்தையை பார்த்து பல்லவன் கூறுகிறார். இதை பார்த்து கோபமடையும் நிலா, பல்லவன் கன்னத்தில் அறைந்து, நீ யார் அவரை இப்படி பேசுவதற்கு, உனக்கு பிடிக்கவில்லை என்றால், நீ இந்த வீட்டிலிருந்து வெளியேறிவிடு என கூறுகிறார்.
இதனால் மனமுடைந்து போகும் பல்லவன், வீட்டிலிருந்து வெளியேறுகிறார். இப்படி பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை சீரியல் இருக்க, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.