அய்யனார் துணை: குலதெய்வ கோவிலில் வரும் சிக்கல்.. சோழன் மனைவியாக நிலா எடுத்த முடிவு
அய்யனார் துணை
விஜய் டிவியில் வெற்றிநடை போட்டு வரும் அய்யனார் துணை சீரியலில் குடும்பமாக அனைவரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளார். குலதெய்வம் கோவிலுக்கு யார் வந்தாலும் இந்த வீட்டில்தான் தங்குவார்கள் என்பதால், அதே வீட்டில் தங்க இவர்களும் முடிவு செய்கிறார்கள்.
ஆனால், இவர்களுக்கு முன்பே அங்கு இவர்களுடைய அத்தை புதிதாக திருமணமான கார்த்திகா - அஸ்வின் ஆகியோருடன் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து வீட்டில் தங்கிவிட்டனர்.
நிலா எடுத்த முடிவு
தற்போது குலதெய்வம் கோவிலில், வீட்டில் உள்ள பெண்கள் பூஜை செய்யவேண்டும் என தெரியவருகிறது. உங்கள் வீட்டில் யார் இந்த பூஜையை செய்யப்போகிறார் என கேட்கிறார்கள்.
இந்த சமயத்தில், அய்யனார் துணை குடும்பமே பெண்கள் இல்லாத வீடு, அந்த வீட்டிற்கும் பெண்களுக்கு ராசியே இல்லை என பேசுகிறார். இதில் கடுப்பான நிலா, என் குடும்பத்திற்காக நான் இதை செய்கிறேன், என சோழனின் மனைவியாக முன் வந்து பூஜை செய்ய ஒத்துக்கொள்கிறார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ: