நான்கு நாட்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தற்போது பிஸியாக இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கிய ராயன் படம் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
ரத்தம் தெறிக்க தெறிக்க இப்படத்தை எடுத்திருந்தார் தனுஷ். இதை தொடர்ந்து தனுஷ் மூன்றாவதாக இயக்கிய திரைப்படம்தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த வாரம் வெளிவந்தது.
இப்படத்தின் மூலம் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில், நான்கு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் IBC Tamilnadu
