6 நாட்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
கடந்த வாரம் வெளிவந்த இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பிரியங்கா மோகன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். ஜிவி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல் விவரம்
6 நாட்களை வெற்றிகரமாக இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.