மனநல காப்பகத்தில் நடிகர் செந்தில்! NINI வைரல் புகைப்படங்கள்
மிர்ச்சி செந்தில் தற்போது மிகவும் பிஸியான சின்னத்திரை நடிகர்களில் ஒருவர். அவர் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் டபுள் ரோலில் நடித்து வருகிறார். மாயன், மாறன் என அவர் நடித்து வரும் இரண்டு கதாபாத்திரங்களுக்கு நடுவில் மோதல் நடந்து வருவது போல தற்போது காட்டப்பட்டு வருகிறது.
தற்போது மிர்ச்சி செந்தில் மனநல காப்பகத்தில் பச்சை நிற சீருடையுடன் இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. NINI ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ தான் அது.
மாறன் போனில் இருந்து மாயன் வேண்டுமென்றே போலீசுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விட, போலீஸ் மாறனை கைது செய்கிறது. அதன் பின் அவருக்கு மனநிலை சரியில்லை என சொல்லி கோர்ட் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறது.
அவர் அங்கு இருப்பது போன்ற காட்சி தான் தற்போது ஷூட் செய்து இருக்கின்றனர். பிரபல காமெடி நடிகர் குண்டு கல்யாணம் இந்த ஹாஸ்பிடல் காட்சிகளில் நடித்து இருக்கிறார். வைரலாகும் போட்டோ இதோ..
மேலும் அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் சிக்கி மாறன் படும் கஷ்டமும் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.
என்ன மாறா... ஒரே குளு குளுன்னு இருக்கா?! ?
— Vijay Television (@vijaytelevision) January 27, 2022
நாம் இருவர் நமக்கு இருவர் - இன்று மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NINI #VIjayTelevision pic.twitter.com/Z9sPqEr7Uo