கமல் சொன்ன வார்த்தை.. ப்ரியங்காவிடம் உருகி மன்னிப்பு கேட்ட நிரூப்! புது ப்ரொமோ
பிக் பாஸ் ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தினை எட்டிவிட்டது. அடுத்த வாரம் பைனல் நடைபெற உள்ள நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆக இருக்கிறார். நேற்று ராஜு மக்கள் வாக்கு மூலம் காப்பாற்றப்பட்டு பைனலுக்கு நுழைந்தார். அதனை தொடர்ந்து பிரியங்காவும் பைனலுக்கு செல்ல, அடுத்து இருக்கும் பாவனி மற்றும் தாமரை இருவரில் ஒருவர் தான் எலிமினேஷன் என இன்றைய முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து வந்திருக்கும் இரண்டாம் ப்ரோமோவில் கமல் போட்டியாளர்கள் தாங்கள் யாருக்காவது மன்னிப்பு நன்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்லலாம் என கூறி இருக்கிறார்.
பிரியங்கா வீட்டில் சாப்பாடு செய்து கொடுத்த தாமரைக்கு நன்றி கூறி இருக்கிறார். தாமரை பிரியங்காவை அடிக்கடி திட்டியதற்காக மன்னிப்பு கேட்டார். மேலும் நிரூப் பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ப்ரொமோ இதோ..