பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இணைந்த 5ம் சீசன் பைனலிஸ்ட்.. எதிர்பார்க்காத என்ட்ரி
பிக் பாஸ் 5ம் சீசன் முடிந்து தற்போது ஒருவாரம் ஆகிறது. ஆனால் இன்னும் ஒரே வாரத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோ தொடங்க இருக்கிறது. அதனால் ரசிகர்களுக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கும். நேரடியாக ஓடிடியில் 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.
மேலும் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறாரார்கள் என்கிற தகவல் எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது. ஜூலி, ஓவியா, வனிதா, பரணி என பரபரப்பு ஏற்படுத்திய பிரபலங்கள் பலரும் இந்த ஷோவில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
ஐந்தாவது சீசன் போட்டியாளர்கள் கூட இந்த ஷோவுக்கு வர இருக்கின்றனர். தாமரை, சுருதி ஆகியோர் இதில் பங்கேற்பது உறுதியாகி இருக்கும் நிலையில் தற்போது நிரூப் கூட இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்து இருக்கிறது.
பிக் பாஸ் 5ல் பைனலிஸ்ட் ஆக வந்த அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.