பைனலுக்கு போகும் வாய்ப்பு.. இதுக்கு இவ்ளோ பெரிய சண்டையா? லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவியின் பிக் பாஸ் 5 ஷோ கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த வாரம் ஃபினாலே நடைபெறும் நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு dare - Sacrifice டாஸ்க் வழங்கப்பட்டு வருகிறது. உப்பு,, சக்கரை வெங்காயம் இல்லாமல் சமைக்க வேண்டும், சாணி குளியல் போட வேண்டும் என பல டாஸ்குகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு dare டாஸ்க் வழங்கப்பட்டது. வெளியுலகத்தில் வேறு மாதிரி இருக்கும் நபர் இங்கு வந்து வரு மாதிரி இருக்கிறார். அதை நாங்கள் கவனித்தோம் என ஒருவரை தேர்வு செய்து இறுதி வாரத்திற்கு அனுப்பலாம் என பிக் பாஸ் கூறினார்.
இதனால் ஒரு பெரிய வாக்குவாதம் வெடித்து இருக்கிறது. இத்தனை நாள் அனைத்தையும் வெளிப்படையாக பேசி வந்த நிரூப் 'எனக்கு அப்படி யார் பற்றியும் தோன்றவில்லை' என சமாளிக்கிறார். அதற்காக அவரை மற்றவர்கள் விமர்சிக்கின்றனர்.
ப்ரோமோ இதோ..