8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கர்ப்பமாகியுள்ள சீரியல் நடிகை நிஷா- அவரே வெளியிட்ட போட்டோ
நிஷா கணேஷ்
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் வலம் வந்தவர் நிஷா கணேஷ்.
கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற தொடரில் திவ்யா கதாபாத்திரத்தில் நடித்து நாயகியாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து வள்ளி, தெய்வமகள், சரவணன் மீனாட்சி, மகாபாரதம், தலையணை பூக்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.
திருமணம்
இவர் கடந்த 2015ம் ஆண்டு கணேஷ் வெங்கட் ராமனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கணேஷ் என்னைப்போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, இவன் வேற மாதிரி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
தற்போது நடிகை நிஷா தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அழகிய புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
விஜய் டிவியின் இந்த முக்கிய சீரியல் நாயகிகளுக்கு டப் கொடுப்பது இவர்தானா?- வீடியோவுடன் இதோ

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
