நடிகர் நிதிஷ் வீராவின் மறைவால் முக்கிய படத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
அசுரன், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் நிதிஷ் வீரா.
இவர் கடந்த மே 17 ஆம் தேதி கொரோனா காரணமாக உயிரிழந்தார், இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்திற்கு உள்ளானது.
மேலும் அசுரன் படத்திற்கு பிறகு செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நிதிஷ் வீராவிற்கு முக்கியமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டது.
அந்த படத்தின் பாதிக் காட்சிகளில் நடித்திருந்த நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை என்ன செய்வது என்ற குழப்பத்தில் படக்குழுவினர் உள்ளனர்.
மேலும் நிதிஷ் வீரா நடித்த காட்சிகளை நீக்கி விட்டு, மீண்டும் வேறு ஒரு நடிகரை வைத்து மறுபடியும் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
