மகாராஜா இயக்குனரின் அடுத்த ப்ராஜெக்ட்.. நயன்தாராவுக்கு இந்த படமாவது கைகொடுக்குமா?
விஜய் சேதுபதி நடித்து சில மாதங்கள் முன்பு முன்பு வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த படத்தை குரங்கு பொம்மை புகழ் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் சாதாரண பாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோவாக ஒரு முக்கிய இடத்தை பிடித்து இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் 50-ஆவது திரைப்படம் தான் மகாராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஜா படம் ஹிட் ஆன பிறகு விஜய், ரஜினி, தனுஷ் என பல நடிகர்கள் இயக்குனர் நித்திலனை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்கள்.

அடுத்த படம் - மகாராணி
இதைத்தொடர்ந்து, நித்திலன் சுவாமிநாதன் அடுத்து நடிகை நயன்தாரா வைத்து ஒரு படம் இயக்கப்போவதாகவும், அந்த படத்திற்கு மகாராணி என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நீண்ட காலமாக விஜய் சேதுபதி ஹிட் கொடுக்கமுடியாமல் திணறிய நிலையில் அவருக்கு மகாராஜா 100 கோடி வசூலுக்கு பெற்று கெரியருக்கு பூஸ்ட் கொடுத்திருக்கிறது.
அதே போல நயன்தாராவின் கேரியரும் தொடர் தோல்வி படங்களால் தற்போது மோசமான நிலையில் தான் இருக்கிறது. அவருக்கு இந்த படமாவது கைகொடுக்குமா?

ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri