நித்யாமேனன் பேய் போன்றவர்.. கிருத்திகா உதயநிதி கூறிய ஷாக்கிங் தகவல்
நித்யாமேனன்
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நித்யாமேனன்.
தமிழில் இவர் நடித்து வெளியான மெர்சல், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு கொடுத்தது.
தற்போது, நித்யாமேனன் கிருத்திகா உயதநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 14 - ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று வெளிவர உள்ளது.
தற்போது, படக்குழுவினர் படத்தின் ப்ரோமோசன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், கிருத்திகா பேட்டி ஒன்றில் நித்யாமேனன் குறித்து பகிர்ந்த விஷயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரகசியம்
அதில், " நித்யா பேய் போன்று நடிப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரின் நடிப்பை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். நாம் நினைத்தது போன்று அவர் நடிக்கவில்லை என்றால் பிரச்சனை அவரிடம் இல்லை. நம்மிடம் தான் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்று டேக்குகளுக்கு மேல் நடிக்க மாட்டார், அப்படி அவரிடம் ரீ டேக் கேட்டால் உங்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லுமாறு கேட்பார். நாம் கேட்பது போல் நடித்து கொடுப்பார்" என்று கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
