படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் கட்டுப்படுத்த முடியாமல்.. நித்யா மேனன் ஓபன் டாக்
நித்யா மேனன்
தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். இதன்பின் வெப்பம், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, மெர்சல், திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
அடுத்ததாக தனுஷுடன் இணைந்து இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தலைவன் தலைவி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 25 - ம் தேதி வெளியாக உள்ளது.

ஓபன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நித்யா மேனன் பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "மதுரையில் சூட்டிங் நடந்தபோது, என்னால் என் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் நிறைய பரோட்டா சாப்பிட்டேன். அத்துடன் பரோட்டா போடவும் கற்றுக்கொண்டேன். படத்துக்காக மட்டுமின்றி படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் பல பரோட்டா சாப்பிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

யூடியூபில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 5 இந்திய பாடல்களில் ஒரு தமிழ் பாடல்! எதுன்னு தெரியுமா? IBC Tamilnadu
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri