நடிகைகள் என்றால் பொம்மையா? ஈஸியாக தொட்டுவிடலாம்.. கடுப்பான நடிகை நித்யா மேனன்
நித்யா மேனன்
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து சினிமாவில் கலக்கியவர் நடிகை நித்யா மேனன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாயகியாக கலக்கிய நடிகைகளின் லிஸ்டில் இவரும் ஒருவர்.
180 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தனுஷின் திருச்சிற்றம்பலம் என்ற படத்திற்காக சிறந்த நாயகிக்கான விருது எல்லாம் பெற்றார்.
பொம்மையா?
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சினிமா உலகில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " பலரும் ஒரு சாதாரண பெண்ணிடம் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படி நடிகைகளிடம் நடந்துகொள்வதில்லை. நடிகை என்றால் ஈஸியாக தொட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
நாங்கள் ஒரு விழாவுக்கு போனால் கூட ரசிகர்கள் கையை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இந்த கேள்வியை சாதாரண ஒரு பெண்ணிடம் கேட்க முடியுமா. ஈஸியாக தொட்டுவிட நாங்கள் என்ன பொம்மையா?" என்று கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
