நித்யா மேனனை ஆறு வருடங்களாக தொல்லை செய்யும் நபர்.. நடிகை அதிர்ச்சி புகார்
தமிழில் மெர்சல், ஓகே கண்மணி உட்பட பல படங்களில் நடித்து கோலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நித்யா மேனன்.
நித்யா மேனன்
நித்யா மேனன் ஒரு நடிகரை விரைவில் திரும்ணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என நித்யா மேனன் விளக்கம் கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் தனக்கு தொல்லை தரும் ஒரு நபர் பற்றி பேசி இருக்கிறார்.

6 வருடமாக தொல்லை தரும் நபர்
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நித்யா மேனன் தனக்கு திருமணம் என தகவல் பரப்பி விட்டது சந்தோஷ் என்ற ஒரு நபர் தான் தனக்கு ஆறு வருடங்களாக தொல்லை கொடுத்து வருவதாக கூறி இருக்கிறார்.
நித்யா மேனனை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர் தொல்லை கொடுத்து வருகிறாராம்.
புது எண்களில் இருந்து அவருக்கு தொடர்ந்து போன் செய்து தொல்லை செய்கிறாராம். அதற்காக 30 நம்பர்களை பிளாக் செய்திருக்கிறாராம்.
நித்யா மேனன் சொல்லி இருக்கும் புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri