நடிகை என்றால் ஈசியாக தொட்டுவிடலாம் என நினைக்கிறார்கள்.. நடிகை நித்யா மேனன் டாக்
நித்யா மேனன்
தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன்.
இதன்பின் வெப்பம், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, மெர்சல், திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் தனக்கென்றி தனி இடத்தை பிடித்துள்ளார்.
அடுத்ததாக தனுஷுடன் இணைந்து இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
நித்யா மேனன் டாக்
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை நித்யா மேனன் பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதில் "நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால், ரசிகர்கள் பலரும் எங்களிடம் கைகொடுக்கவும், ஒட்டி உரசி நின்று புகைப்படம் எடுக்கவும் கேட்கிறார்கள். நடிகை என்றால் ஈசியாக தொட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி சுலபமாக தொட்டுவிட, நாங்கள் என்ன பொம்மைகளா" என பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
