அது போன்ற படங்களில் நடிக்கமாட்டேன்.. அதிரடியாக கூறிய நடிகை நித்யாமேனன்
நித்யாமேனன்
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நித்யாமேனன்.
தமிழில் இவர் நடித்து வெளியான மெர்சல், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு கொடுத்தது.
அதில், குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நித்யாமேனன் அவர் எவ்வாறு படத்தை தேர்வு செய்கிறார் என்பதை குறித்து பகிர்ந்துள்ளார்.
அதிரடி பதில்
அதில், " நான் தேர்வு செய்யும் கதாபாத்திரம் அனைவராலும் விரும்பப்பட வேண்டும் என்று நினைத்து கொண்டு கதைகளை தேர்ந்தெடுக்க மாட்டேன். அந்த கதாபாத்திரம் எனக்கு மகிழ்ச்சி தந்தால் மட்டுமே அதை தேர்வு செய்வேன்.
மேலும், அதிக செலவில் பிரமாண்டமாக தயாராகும் படத்தின் கதை சரி இல்லை என்றால் அது போன்ற படங்களில் நடிக்க மாட்டேன். அதற்கு மாறாக சிறிய பட்ஜெட் படத்தில் நல்ல கதாபாத்திரம் இருந்தால் கூட தயங்காமல் நடிப்பேன்" என்று கூறியுள்ளார்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
