திருமணம் நின்றுவிட்டதாக கூறப்படும் நிலையில் நிவேதா பெத்துராஜ் போட்ட பதிவு
நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர். அந்த படத்தில் நிவேதா வரும் அடியே அழகே பாடல் பெரிய அளவில் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து அவருக்கு தமிழ், தெலுங்கு என பட வாய்ப்புகள் அதிகம் வர பிசியாக நடித்தார். இருப்பினும் கடந்த சில வருடங்களாக அவர் படங்களில் நடிக்காமல் தான் இருக்கிறார்.
கடந்த வருடம் நிவேதா பெத்துராஜுக்கு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ரஜித் இப்ரான் என்பவர் உடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சமீபத்தில் அந்த போட்டோக்களை நிவேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். அதனால் நிவேதா திருமணம் நின்றுவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

2026ஆவது நன்றாக இருக்குமா
இந்நிலையில் புத்தாண்டு அன்று நிவேதா ஒரு பதிவை போட்டிருக்கிறார். "2026 - be nice" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
வெளிநாட்டில் எடுத்த சில புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். 2026ஆவது நன்றாக இருக்க வேண்டும் என அவர் போட்டிருக்கும் பதிவு வைரலாகி இருக்கிறது.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri