5 வருடம் முன்பு அங்கு தான் சந்தித்தேன்.. காதல் கதையை சொன்ன நிவேதா பெத்துராஜ்
நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் தனது காதலர் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார். அது இணையத்தில் வைரல் ஆக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அவருக்கு வரும் அக்டோபர் மாதம் காதலர் ரஜித் இப்ரான் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. மேலும் அடுத்த வருடம் ஜனவரியில் திருமணம் நடத்த இரண்டு குடும்பமும் முடிவெடுத்து இருக்கிறதாம்.
துபாயில் சந்தித்தேன்
5 வருடங்களுக்கு முன்பு துபாய் ரேஸ் ட்ராக்கில் தான் நிவேதா அவரை சந்தித்தாராம். அதன் பிறகு நண்பர்கள் ஆகி பழக தொடங்கி இருக்கின்றனர்.
ஒருகட்டத்தில் அது காதலாக மாறி இருக்கிறது. வெவ்வேறு மதம் என்றாலும் இரண்டு குடும்பங்களும் ஒத்து போவதால் தான் இப்போது திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாக நிவேதா கூறி இருக்கிறார்.
திருமணத்தை கொஞ்சம் எளிமையாக நடத்த இருப்பதாகவும் நிவேதா கூறி இருக்கிறார்.