நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் இப்படியொரு சீரியல் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்?
நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழை அழகாக பேசி நடிக்கும் ஒரு தமிழ் பொண்ணு. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.
சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக, பொதுவாக என் மனசு தங்கம் போன்ற படங்களில் நடித்து மக்களிடம் நல்ல அங்கீகாரம் பெற்றுள்ளார்.
நிஜ வாழ்க்கையிலும் ஃபார்முலா ரேஸ் கார் ரேஸ் பயிற்சி முடித்துள்ளார். அந்த வீடியோக்கள் எல்லாம் வெளியாக ரசிகர்களும் சூப்பர் என கமெண்ட் செய்து வந்தனர்.
நிவேதா பெத்துராஜ் மாடலிங் செய்துகொண்டிருக்கும் போது ஒரு தமிழ் சீரியலிலும் நடித்துள்ளார்.
அதுதான் பிரம்மாண்டமாக உருவான பொன்னியில் செல்வன், இதில் நந்தினி வேடத்தில் நடித்து வந்தார். ஆனால் சீரியல் சில காரணங்களால் படப்பிடிப்பு நடந்தும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
சீரியல் வந்திருந்தால் நிவேதா சின்னத்திரையில் தான் முதலில் அறிமுகமாகி இருப்பார். சீரியலில் நிவேதா பெத்துராஜின் லுக் இதோ,