கயலை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த சீரியல்! எதிர்பார்க்காத ஒரு தொடர்
சன் டிவியின் கயல் சீரியல் தான் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த வாரம் கயல், எதிர்நீச்சல், சுந்தரி ஆகிய சீரியல்கள் முறையே முதல் மூன்று இடங்களில் இருந்தன.
வானத்தைப்போல தொடர் நான்காவது இடத்தில் தான் இருந்தது. காணாமல் போன சின்ராசுக்கு என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கலக்கத்தில் இருக்கிறார்கள். சின்ராசுவை கண்டுபிடிக்க போலீஸ் வீரசிங்கம் (சஞ்சீவ்) முயற்ச்சித்து வருகிறார்.
ரேட்டிங்கில் முதலிடம்
தற்போது கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி வானத்தைப்போல தொடர் முதலிடத்தை பிடித்து இருக்கிறது.10.40 TVR பெற்று வானத்தைப்போல சீரியல் நீண்டகாலத்திற்கு பிறகு முதலிடத்தை பிடித்து இருக்கிறது.
இதற்க்கு ரசிகர்களும் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.