வாரிசு
விஜய்யின் வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் சூழலில், தெலுங்கில் அதற்கு ஒரு பிரச்சனை கிளம்பியது. நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் சங்கராந்தி ரிலீஸில் முன்னுரிமை, டப்பிங் படங்களுக்கு இல்லை என தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இதனால் சர்ச்சை வெடித்தது. தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடணும், தமிழ் படம் அங்கே ரிலீஸ் ஆக கூடாதா என பலரும் கேள்வி எழுப்பினர்.
இனி சிக்கல் இல்லை: தேனாண்டாள் முரளி
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் இன்று நடந்தது. அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் தேனாண்டாள் முரளி வாரிசு படத்திற்கு வந்திருக்கும் சிக்கல் பற்றி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
'தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அவர்களது தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும், அதே போன்ற ஒரு விஷயத்தை எங்களையும் செய்ய வைத்துவிடாதீர்கள் என லெட்டர் அனுப்ப இருக்கிறோம். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டிருககிறார்கள்' என முரளி தெரிவித்து இருக்கிறார்.
"அவர்கள் சொன்ன விஷயங்களின் படி வாரிசு படத்திற்கு இனி சிக்கல் இருக்காது. நிச்சயம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்" எனவும் அவர் உறுதியாக கூறி இருக்கிறார்.
40+ படம் நடிச்சியிருக்கேன், ஆனா இது தான் பர்ஸ்ட் டைம்: ஜான் கொக்கன்