இனி பேசவே மாட்டேன்.. மும்பையில் செட்டில் ஆக பாடகி சுசித்ரா முடிவு
பாடகி சுசித்ராவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னதாமரை பாடல் உட்பட சுமார் 1500 பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக சுசித்ரா கூறும் கருத்துகள் சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்து இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு அவரது முன்னாள் கணவர் கார்த்திக் பற்றி கூறிய கருத்து சர்ச்சை ஆனது. அதை எதிர்ச்சி அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பற்றிய பல்வேறு ரகசியங்களையும் சுசித்ரா வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வந்தார்.
மும்பையில் செட்டில்
தற்போது சுசித்ரா மும்பையில் செட்டில் ஆவதாக தெரிவித்து இருக்கிறார். அங்கு அவர் குழந்தைகளுக்கான மாத இதழ் ஒன்றில் பணியாற்ற இருக்கிறாராம்.
அதனால் இனி youtubeல் எந்த வீடியோவும் வெளியிடமாட்டேன் என அவர் கூறி இருக்கிறார்.



வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
