No other Choice திரை விமர்சனம்
கொரியன் சினிமா உலகின் மாஸ்டர் என அன்பாக அழைக்கப்படும் பார்க் சான் வுக் இயக்கத்தில் நோ அதர் சாய்ஸ் என்ற படம் திரைக்கு வர, உலகளவில் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவிக்க, அந்த பாராட்டுக்கு ஏற்றதா இந்த படம் பார்ப்போம்.

கதைக்களம்
நாயகன் லீ பேப்பர் கம்பெனி ஒன்றில் மிகப்பெரிய பொறுப்பில் வேலைப்பார்க்கிறார். நல்ல வருமானம் வர, ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் மகனுடன் சிங்கிள் மதராக தற்போது இருக்கும் நாயகி சன்-யை திருமணம் செய்கிறார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது, அதன் பிறகு மிக அழகாக இவர்கள் வாழ்க்கை செல்ல, ஒரு நாள் இவர் கம்பனியை ஒரு அமெரிக்கா நிறுவனம் வாங்குகிறது.

இதனால் இவருடைய வேலை பரிப்போக, தன்னுடைய திறமைக்கை 3 மாதத்தில் வேலை கிடைக்கும் என லீ சபதம் விட, 13 மாதம் ஆகியும் வேலை கிடைக்கவில்லை, சொந்த வீட்டின் லோன் கழுத்தை நெருக்குகிறது.
லீ இதை சரிகட்ட ஒரு பெரிய கம்பெனி ஒன்றில் இண்டெர்வியூ-க்கு செல்ல, அங்கு அவருக்கு போட்டியாக 3 பேர் வர, இதன் பின் என்ன ஆனது என்பதை ப்ளாக் காமெடி-யாக எடுத்துள்ளார் பார்க் சான் வுக்.

படத்தை பற்றிய அலசல்
பார்க் சான் வுக் படம் என்றாலே இரத்தம், சதை, வைலன்ஸ், டுவிஸ்ட் எதிர்ப்பார்க்காத திரைக்கதை என்றே இருக்கும், ஆனால், இந்த படத்தில் அனைத்தையுமே குறைத்துள்ளார், டார்க் காமெடி படம் என்பதால் எதற்காக இவ்வளவு என்று நினைத்தாரோ தெரியவில்லை, கொஞ்சம் அடக்கியே வாசித்துள்ளார்.
நாயகன் லீ முழுப்படமும் இவரை சுற்றியே நடக்கிறது, வேலைப்போனதும் அதற்காக இவர் செய்யும் வேலைகள் எல்லாம் நிஜ வாழ்க்கையில் அச்சத்தை ஏற்படுத்தினாலும், இந்த மாதிரியான செய்திகளை நாமே நாளிதழில் பார்த்தும் இருப்போம்.

படத்தின் ஒரு சில காட்சிகள் பார்க் சான் வுக் ரசிகர்களுக்கு என்றே விருந்தாக அமைந்துள்ளது, ஒரு குடும்பத்தை எட்டி பார்க்க வரும் ஹீரோ, அங்கு பாம்பு கடிக்க, அந்த குடும்பத்தை சார்ந்த பெண்ணே லீ-ன் காலில் வாய் வைத்து விஷத்தை உரிய, அந்த நேரத்தின் லீ மனைவி சான் வீடியோ கால் செய்ய, அப்போது அவர் சமாளிக்கும் இடமெல்லாம் எப்படி சார் யோசிக்கிறீங்க என்று கேட்க வைக்கிறது.
அதிலும் 3 கதாபாத்திரங்கள் ஒரு கான்வே உள்ளது, அப்போது ஹை லெவல் சவுண்ட்-ல் இவர்கள் பேசும் இடமெல்லாம் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான். நாயகன் லீ தாண்டி அவர் மனைவி சான்-ம் தனக்கான கதாபாத்திரத்தில் தூள் கிளப்புகிறார், என்ன ஆனாலும் பரவால்ல எனக்கு குடும்பம் முக்கியம் உனக்காக நான் நிற்பேன் என்று அவர் பேசும் இடம் செம ஸ்கோர் செய்கிறார். அட அப்படி என்ன செய்கிறார் ஹிரோ என்பதை கேட்காதீர்கள் படத்தை பாருங்கள்.

சமூகத்தில் ஒருவருக்கு வேலை போவது அவரை எந்த அளவிற்கு பாதிக்கிறது, அவரை எந்த எல்லைக்கு கொண்டு செல்கிறது என்பதை பார்க் சான் வுக் டார்க் காமெடியில் காட்டியுள்ளது, இந்த படத்தை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்வதா, இல்லை காமெடியா என்ற குழப்பம் நீட்டிக்கிறது, அதனாலேயே பாராசைட் அளவிற்கு ஒரு தாக்கத்தை இது தரவில்லை.
இந்த வருடம் கொரியன் சினிமாவிலிருந்து இதை தான் ஆஸ்கருக்கு அனுப்பியுள்ளனர் என்பது கூடுதல் தகவல். டெக்னிக்கலாக படம் செம வலுவாகவே உள்ளது, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாம் டாப்.

க்ளாப்ஸ்
நடிகர், நடிகை பங்களிப்பு
வசனங்கள்
திரைக்கதை.
பல்ப்ஸ்
மேலே சொன்னது போல் மிகவும் சென்சிட்டிவ் ஆன விஷயத்தை காமெடி ஆக சொல்வது கொஞ்சம் தடுமாற்றம்.
மொத்தத்தில் கொரியன் பட ரசிகர்கள் அதிலும் பார்க் சான் வுக் ரசிகர்களுக்கு எந்த ஏமாற்றமும் இருக்காது.
