லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிர்ச்சி.முடிவு.. இது தான் காரணமா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து இருக்கிறார். அவரது நிறுவனத்தின் முதல் படமாக பைட் கிளப் படம் சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது.
அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக லோகேஷ் பேட்டிகள் கொடுத்த போது லியோ படத்தின் இரண்டாம் பாதியை சில விமர்சித்தது பற்றி அவர் கருத்து கூறி இருந்தார்.
இப்படி விமர்சனங்கள் வருவதனால் இனி ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு எந்த படத்தையும் இயக்க மாட்டேன் என தெரிவித்து இருந்தார். லோகேஷ் லியோ இரண்டாம் பாதி சரியில்லை என ஒப்புக்கொண்டதை விஜய் ரசிகர்கள் விமர்சித்து இருந்தனர்.

அதிர்ச்சி முடிவு
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தான் ரஜினியின் 171 படத்தின் பணியாற்ற இருப்பதால் சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருக்க போவதாகவும் கூறி இருக்கிறார்.
மேலும் தான் போன் கூட பயன்படுத்தமாட்டேன் என தெரிவித்து இருக்கிறார் அவர். லோகேஷ் இப்படி ஒரு முடிவை எடுக்க சமூக வலைத்தளங்களில் வரும் ட்ரோல்கள் மற்றும் விமர்சனங்கள் தான் காரணமா என்கிற பேச்சு தற்போது எழுந்திருக்கிறது.
IGNORE NEGATIVITY ❤️
— KARTHIK DP (@dp_karthik) December 17, 2023