Nobody 2 திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் ஜான்விக் போன்ற கதைக்களத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் Nobody முதல் பாகம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்க, தற்போது இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது, இதுவும் அத்தகைய ஆக்ஷன் விருந்தை கொடுத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் நாயகன் ஹட்ச் தனக்கு கொடுக்கும் அசாசின் வேலையை தினமும் முடித்துவிட்டு வீட்டிற்கு அப்பாவி போல் வருகிறார், அவர் மனைவியோ இந்த ஆக்ஷன் சண்டை எல்லாம் வேண்டாம் என எவ்வளவு சொல்லியும் இவர் கேட்பதாக இல்லை.
ஒரு கட்டத்தில் இந்த ஆக்ஷனை இனியும் தொடர்ந்தால் நம் குடும்பம் நம்மை விட்டு போய் விடும், குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என் முடிவு செய்கிறார்.
அதனால் ப்லிம்மர்வில்லா என்ற இடத்திற்கு வெக்கேஷன் செல்கிறார், தன் அப்பா, மனைவி, பையன், மகள் என எல்லோரையும் அங்கு அழைத்து செல்கிறார்.
அங்கு சென்ற இடத்தில் அந்த ஊர் லோக்கல் பெரிய டான் ஒருவரின் மகனிடம் ஹட்ச்-ன் மகன் சண்டை இழுக்க, பிறகு என்ன தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் அடிதடி-யை மீண்டுன் கையில் எடுத்து இந்த முறை எப்படி அங்கிருந்து தன் குடும்பத்தை பாதுக்காப்புடன் மீட்டு கொண்டு வருகிறார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஹட்ச் முதல் பாகத்தில் எப்படி ஒரு பஸ்ஸில் அனைத்து ரவுடிகளையும் அடித்து துவம்சம் செய்கிறாரோ, அதே போல் இந்த படத்திலும் போட்-ல் தொட்ங்கி ஒரு தீம் பார்க்-யே அடித்து தூள் கிளப்புகிறார்.
ஆனால், லாஜிக் எல்லாம் படத்தில் எங்கு இருக்கிறது என்று தப்பி தவறி கூட கேட்டு விடாதீர்கள், பவர் இல்லாத சூப்பர் ஹீரோ தான் இந்த ஹட்ச், பல ஆயிரம் குண்டு சுட்டாலும் ஒரு குண்டு அவர் தோள்பட்டையில் படும், கத்தி, கோடாரி என எதில் குத்தினாலும் அடுத்த நாள் முகத்தில் கண் ஓரத்தில் சிறு காயம் இருக்கும், அவ்வளவு தான் இப்படி அநியாயத்திற்கு நம்ம் ஊர் மாஸ் ஹீரோக்களை மிஞ்சும் சாகசம் தான்.
அதிலும் கிளைமேக்ஸ் அந்த தீம் பார்க்-யை ஹோம் அலோன் படத்தில் வருவது போல் அங்கும் இங்கும் ஆயுதங்கள் வைத்து எதிரிகளை போட்டு தள்ளுவது எல்லாம், ஷப்பா ஹாலிவுட்டுக்கே உண்டான அலுப்பு தட்டாத பார்முலா.
படத்தில் எந்த ஒரு இடத்திலும் தப்பி தவறி கூட எமோஷ்னல் சீன் என்ற ஏதுமே இல்லை, படத்தில் வரும் தீம் பார்க் போல், நாமும் ஒரு தீம் பார்க் சென்று இருக்கிற விளையாட்டுகளில் எவ்வளவு ஜாலியாக விளையாடுவோமோ அப்படி ஒரு ஜாலி ரைட் ஆகவே இந்த ஹட்ச் அமைந்துள்ளது.
ஹட்ச் தாண்டி படத்தில் அவருடைய மனைவி கதாபாத்திரம் கவனம் ஈர்க்கிறது, என் புருஷன் மேலைய கண் வைக்கிற என்று கிளைமேக்ஸில் வில்லியுடன் Gun பாயிண்ட்-ல் மோதும் காட்சி ரசிக்க வைக்கிறார்.
வில்லியாக வரும் லெடினா நா வில்லி தெரியுமா நா யார் காட்டுகிறேன் என்று ஒருவன் கையை குத்தி கிழிக்கிறார், அதிலும் படம் முடிய அரை மணி நேரம் முன்பு தான் இவர் வர, பெரிதும் மனதில் நிற்கவில்லை. டெக்னிக்கலாக படம் வலுவாகவே உள்ளது, அதிலும் ஒளிப்பதிவு, இசை, சண்டைகாட்சிகள் என அனைத்தும் சூப்பர்.
க்ளாப்ஸ்
சண்டைக்காட்சிகள்.
டெக்னிக்கல் விஷயங்கள்.
பல்ப்ஸ்
கொஞ்சம் கூட எமோஷ்னல் என்று ஒரு காட்சியும் இல்லாதது.
லாஜிக் மீறல்கள் இல்லை எல்லை மீறல்கள்.