மீரா மிதுன் வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு.. சர்ச்சை நடிகை மீண்டும் கைதாகிறார்
நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் பற்றி மோசமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் போராடி ஜாமீன் பெற்றார்.
விசாரணைக்கு ஆஜராகவில்லை
அவர் ஜாமினில் வெளியில் வந்த பிறகு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதனால் கடந்த மார்ச் 23ம் தேதி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன் பின் அவர் போலீசாரால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதற்கு பிறகு அவர் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.
மீண்டும் பிடிவாரண்ட்
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சிகள், மீரா மிதுனின் நண்பர் சாம் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். ஆனால் மீரா மிதுன் வரவே இல்லை. அவரது வழக்கறிஞர் கூட வரவில்லை.
இது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல் என சொல்லி மீரா மிதுனுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார். அதனால் மீரா மிதுன் விரைவில் மீண்டும் கைதாவார் என தெரிகிறது.
பேட்டியளிப்பதை தவிர்பதற்கான காரணத்தை சொன்ன அஜித் ! வெளியான அவரின் அன்சீன் வீடியோ