லிங்கா பட நடிகைக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. அந்த படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்த நிலையில் அதற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது ஹிந்தி சினிமாவில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. மோசடி வழக்கில் தான் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
டெல்லியில் ஒரு eventல் கலந்துகொள்வதற்காக சோனாக்ஷி 37 லட்சம் ருபாய் வாங்கி இருக்கிறார். ஆனால் விழாவில் அவர் பங்கேற்காமல் இருந்திருக்கிறார். அதனால் அந்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டிருக்கின்றனர், ஆனால் சோனாக்ஷியின் மேனேஜர் அதை தரமுடியாது என மறுத்திருக்கிறார்.
அதனால் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக சோனாக்ஷி ஒருமுறை வந்து தனது ஸ்டேட்மென்ட்டை பதிவு செய்து இருக்கிறார். ஆனால் அடுத்தடுத்து அவர் ஆஜராக தவறியதால் தற்போது நீதிபதிகள் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருக்கின்றனர்.
இதனால் சோனாக்ஷி விரைவில் கைதாவரா என கேள்வி எழுந்திருக்கிறது. வழக்கு எப்படி நகரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan