இதுவரை நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
நூறு சாமி
லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்வாசிகா. இப்படத்தின் வெற்றிக்குப் பின் சூரியுடன் இணைந்து மாமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் கருப்பு திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து நடிகை ஸ்வாசிகா கதையின் நாயகியாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் நூறு சாமி. இப்படத்தை இயக்குநர் சசி இயக்க, விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். தயாரிப்பு மட்டுமின்றி முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருந்தார்.
வசூல் விவரம்
மேலும் அஜய், பாலாஜி சக்திவேல், சக்தி, காவ்யா, கருணாஸ், லிஜோமோல் ஜோஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஜூன் 19-ஆம் தேதி திரைக்கு வந்த நூறு சாமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நூறு சாமி திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளது.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan