2 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
புதிதாக வெளிவரும் திரைப்படங்களின் வசூல் குறித்து விவரங்களை நாம் பார்ப்போம். அந்த வகையில் நூறு சாமி திரைப்படத்தின் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க.

சசி - விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் உணர்ச்சிகரமான கதைக்களத்தை நேர்த்தியான திரைக்கதையில் வடிவமைத்து ஹிட் கொடுப்பவர் இயக்குநர் சசி. இவர் விஜய் ஆண்டனியை வைத்து இயக்கிய திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பதில்லை.

நூறு சாமி
பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பின் சசி - விஜய் ஆண்டனி மீண்டும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'நூறு சாமி' படத்தில் இருவரும் மீண்டும் கைகோர்த்தனர். இப்படத்தில் ஸ்வாசிகா, அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், ஜென்சன், காவ்யா அனில் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் கடந்த19ஆம் தேதி திரைக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல்
இந்த நிலையில், நூறு சாமி திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 3 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
