3 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
நூறு சாமி
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று பிச்சைக்காரன். இப்படத்தை இயக்குநர் சசி இயக்கியிருந்தார்.

இப்படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் இவர்கள் இருவரும் கைகோர்த்துள்ள திரைப்படம் தான் நூறு சாமி. ஆனால், இப்படத்தில் தன்னை ஹீரோவாக முன்னிறுத்துவதை விட, நடிகை ஸ்வாசிகாவை கதையின் நாயகியாக நடிக்க வைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்குநர் சசி இயக்கியுள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த நூறு சாமி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல்
இந்த நிலையில், நூறு சாமி திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளது.

இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சுமாரான ஓப்பனிங் ஆக தான் பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் நூறு சாமி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan