நூறு சாமி திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?
நூறு சாமி
இயக்குநர் சசி - நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பது அவசியம் இல்லை.

பிச்சைக்காரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் மீண்டும் சசி - விஜய் ஆண்டனி கூட்டணி எப்போது அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நூறு சாமி. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஷ், அஜய், காவ்யா அணில் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நாளை இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல் விமர்சனம்
இதில், இயக்குநர் சசி சார் கிட்டத்தட்ட மூன்று decade-களை கடந்து நேர்மையுடனும் ஆர்வத்துடனும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். காலத்திற்கேற்ற மாற்றங்கள் மற்றும் பல சவால்கள் இருந்தபோதிலும், முக்கியமான சமூக பிரச்சினைகளை பேசும் படங்களை உருவாக்குவதில் அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை.

நூறு சாமி திரைப்படத்தின் கதைக்கரு உணர்வுபூர்வமானது. அதை அவர் கையாண்ட விதமும், வணிக ரீதியாக சிறப்பாகப் படமாக்கியதுமே அவரை தனித்துவமாக்குகிறது. நடிகை ஸ்வாசிகாவின் நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது; அந்தப் கதாபாத்திரத்தை அவர் மிக சிறப்பாக உள்வாங்கி திரையில் வெளிப்படுத்தியிருந்தார்.

விஜய் ஆண்டனி அவர்கள் தயாரிப்பாளராக இப்படத்தை ஆதரித்ததற்கும், அவர் அந்த கதாபாத்திரத்தையும் மிகுந்த நேர்த்தியுடன் ஏற்று நடித்ததற்கும் பாராட்டுகள். மொத்த படக்குழுவிற்கும், நூர் சாமி படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைய வாழ்த்துகள்" என படத்தை புகழ்ந்து தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.
Happened to watch #Noorusami ! #Sasi sir has been making films with so much sincerity and passion for almost 3 decades!
— arun Viswa (@iamarunviswa) June 18, 2026
inspite of the change in trends and so many other factors he never shies away from making films which addresses important issues!
The content of nooru Sami…