காஞ்சனா 4க்கு பின் தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள்.. ஓபனாக பேசிய நடிகை நோரா ஃபதேஹி
நோரா ஃபதேஹி
பாலிவுட் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நோரா ஃபதேஹி. குறிப்பாக தனது கிளாமரான நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
ஹிந்தியில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த இவர், தற்போது முதல் முறையாக தமிழ் சினிமா பக்கம் தன் கவனத்தை திரும்பியுள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நோரா ஃபதேஹி. இவருடன் பூஜா ஹெக்டேவும் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடைந்த Franchice-ல் முக்கியமான ஒன்று காஞ்சனா படங்கள். இதில் தற்போது 4ம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஓபனாக பேசிய நடிகை
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை நோரா ஃபதேஹி, காஞ்சனா 4 குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். இதில், "காஞ்சனா 4 எனக்கு தமிழில் முதல் படம். இந்த படம் வெளிவந்த பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள். இவரை புக் பண்னுங்க என படக்குழு அலைய போகிறது" என கூறியுள்ளார்.