யாழில் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! -இத்தனை நட்சத்திரங்கள் வருகிறார்களா?

By Parthiban.A Feb 02, 2024 02:43 PM GMT
Report

தமிழ் சினிமா துறையில் ஏராளமான ஹிட் பாடல்கள் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருப்பவர் ஹரிஹரன்.

தற்போது Magick Home மற்றும் Northern Uni வரும் பிப்ரவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை யாழ் நகரில் பிரமாண்டமாக நடத்தும் இசை கச்சேரியில் ஹரிஹரன் பாட இருக்கிறார். அவர் மட்டுமின்றி பல முக்கிய இந்திய சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 6 மணிக்கு இந்த இசை நடன நட்சத்திர திருவிழா தொடங்குகிறது.

யாழில் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! -இத்தனை நட்சத்திரங்கள் வருகிறார்களா? | Northern Uni Hariharan Live In Concert Star Night

இதுவரை 38,000 பேர் இலவச உள்நுழைவுக்கான பதிவுகளை செய்து இருக்கின்றனர். தற்போது ஆசன டிக்கெட் தேவைப்படுபவர்களுக்கு, seatகளை zone வாரியாக பிரித்து அதனை குறிப்பிட்ட தொகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

டிக்கெட் விற்பனை மூலம் பெறப்படும் நிதியானது யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு (YES - Yarl Education Support Fund) வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலமாக வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மாணவர்கள் உயர் கல்வி பெற உதவ முடியும்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US